» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத மோதலை உருவாக்கும் விதத்தில் பிரசாரம் : சித்துவுக்கு 3 நாட்கள் தேர்தல் ஆணையம் தடை!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 5:20:08 PM (IST)

மத மோதலை உருவாக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து 72 மணிநேரத்துக்குப் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் சர்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக எழுந்த புகாரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து இருந்தது. அவர்களோடு சித்துவும் இப்போது இணைந்துள்ளார்.

பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 16-ம் தேதி ஈடுபட்டார். பல்ராம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பர்சோய் நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சித்து பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், "பாஜக உங்களை மதரீதியாகப் பிளபுபடுத்த முயற்சிக்கிறது. இங்கு நீங்கள் 64 சதவீதம் பேர் இருக்கிறீர்கள். நீங்கள் சிறுபான்மையினர் இல்லை. பெரும்பான்மையாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாகs சேர்ந்து வாக்களித்தால் பாஜகவையும், மோடியையும் விரட்ட முடியும். ஆதலால் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் மதத்தை முன்வைத்துப் பேசினார்.

இதையடுத்து, கத்தியார் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பெயரில் பர்சோய் நகர போலீஸார் சித்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட பாஜக சார்பிலும் சித்து மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு சித்து பிரச்சாரம் செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், பிஹாரின் கத்தியார் மாவட்டம், பராரி, பர்சோய் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சித்து பேசிய வார்த்தைகளை தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்டிக்கிறது. சித்துவின் வார்த்தைகள் தேர்தல் நடத்த விதிமுறைகளுக்கு மாறானவை, ஒழுக்கக்கேடானவை. இந்திய அரசமைப்புச் சட்டம் 324 பிரிவின்படி, அடுத்த 72 மணிநேரத்துக்கு சித்து எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், பேரணிகள், காட்சிக்கூடங்கள், நேர்காணல்கள், பொதுமக்களிடம் பேசுவது ஆகியவற்றை மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை 23-ம்தேதி காலை 10 மணிமுதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைApr 24, 2019 - 12:27:46 PM | Posted IP 162.1*****

சாமி..உங்களை எங்கே அனுப்பலாம்?

சாமிApr 23, 2019 - 06:21:33 PM | Posted IP 172.6*****

இவனை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் - உண்மையில் இவன் ஒரு பாக்கிஸ்தான் குடிமகன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory