» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி கூறுவது பொய்யா? அல்லது ஞாபக மறதியா? ப.சிதம்பரம் கேள்வி

திங்கள் 22, ஏப்ரல் 2019 11:58:39 AM (IST)

தனது 5 ஆண்டு கால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நிகழவில்லை என பிரதமர் மோடி கூறுவது பொய்யா? அல்லது ஞாபக மறதியா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த 13 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏதேனும் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததுண்டா? என்று பேசினார். பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை (ஏப் 13) தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி பேசுகையில், காவலாளியின் அரசு பலமானதாகவும், உறுதிமிக்க நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாகவும் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கிய முந்தைய ஆட்சியில் நாள் தவறாமல் ஊழல் புகார் எழுந்ததையும், முடிவுகளை எடுப்பதில் கால தாமதம் நிலவியதையும் பார்த்திருப்பீர்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அவ்வபோது குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. விவசாயிகள், நடுத்தர மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் அதில் கொல்லப்பட்டனர். ரயில்கள், பேருந்துகள், பயணிகளுக்கான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 

ஆனால், உங்களுடைய பாதுகாவலனின் 5 ஆண்டு கால காவலில், அதுபோன்ற குண்டுவெடிப்புகள் காணாமல் போயின. ஏனெனில், சிறு தவறு நடந்தாலும் அதற்கு கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற பயம் பயங்கரவாதிகளின் மனதில் காவலாளியால் உருவாக்கப்பட்டது. பயங்கரவாதிகள் எங்கு இருந்தாலும், காவலாளி அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பார். உங்களது ஒரு வாக்கு இதை சாத்தியப்படுத்தியுள்ளது.

நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்ற போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உள்துறை அமைச்சரை மாற்றும். அதன்பின் மொத்த பழியையும் ஒரு நபர் மீது சுமத்தும். ஆனால், மோடி உள்துறை அமைச்சரை மாற்றவில்லை. அதற்கான வழிகளை மாற்றினார். 

பாகிஸ்தானிடமும், ஒட்டுமொத்த உலகத்தின் முன்பும் முந்தைய அரசு பலவீனமானதாகக் காட்சியளித்தது. நமது ராணுவம் பதிலடி தாக்குதல்களை நடத்த விரும்பியபோது, அப்போதைய அரசு அமைதியாக இருந்துவிட்டது. ஆனால், பயங்கரவாதிகளை அவர்களது எல்லைக்கே சென்று தாக்கி அழிக்க இந்தக் காவலாளி அனுமதி அளித்தார். இத்தகைய பலமிக்க அரசு இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியளித்ததா?

ரகசியம் காப்பதற்காக மிஷன் சக்தி திட்டம் குறித்த பரிசோதனையை நடத்தவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற அணுகுமுறை காரணமாக தான் தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கியிருக்கிறது. ஆனால், மோடி தைரியத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் இன்று உலகமே இந்தியாவை வலிமை வாய்ந்த நாடாக பார்க்கிறது. இப்போது காவலாளியின் நேர்மையான அரசு வேண்டுமா அல்லது ஊழல் கறைபடிந்த வாரிசுதாரர் வேண்டுமா என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். இந்தியாவின் நாயகர்கள் வேண்டுமா அல்லது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்று பேசியிருந்தார். 

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், தனது 5 ஆண்டு கால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நிகழவில்லை என பிரதமர் மோடி கூறுவது பொய்யா? அல்லது ஞாபக மறதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, தனது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நிகழவில்லை என கூறும் மோடி 2014, 2015-ல் ஜம்முவில், 2016-ல் பலாமு, அவுரங்காபாத்தில் குண்டுவெடிப்பு என 2019 வரை நிகழந்த குண்டுவெடிப்பு நிகழ்வுகளை பட்டியலிட்டு ப.சிதம்பரம் கேள்வி எழுப்புயுள்ளார். 


மக்கள் கருத்து

உண்மைApr 24, 2019 - 06:30:30 PM | Posted IP 162.1*****

தீவிரவாதம் பற்றி மோடி பேசுகிறார். வெடிகுண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதம் அல்ல. மாற்று மதத்தினரை அடித்துக் கொல்வதும் தீவிரவாதம் தான்..

உண்மைApr 23, 2019 - 01:21:34 PM | Posted IP 141.1*****

ஜாமின் குடும்பம்! விரைவில் குடும்பத்தோடு திகார் சிறையில்!

ராமநாதபூபதிApr 22, 2019 - 02:29:19 PM | Posted IP 162.1*****

அவரு சொல்றது எல்லாமே பொய் தானே. இதில் ஞாபக மறதிக்கு என்ன வேலை??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory