» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல சதி: பாஜக மீது ராப்ரி தேவி பரபரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு

திங்கள் 22, ஏப்ரல் 2019 11:37:41 AM (IST)

"லாலு பிரசாதுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்கு பாஜக சதி செய்கிறது என்று அவரது மனைவியும் ஆர்ஜேடி தேசிய துணைத் தலைவருமான ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலு, பல்வேறு உடல் உபாதைகளுக்காக ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், சுட்டுரையில் ராப்ரி தேவி ஞாயிற்றுக்கிழமை விடியோ பதிவொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்தியிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக, ராஞ்சி மருத்துவமனையில் லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறது. லாலு மட்டுமன்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். அவர்களால் அதனை செய்யவும் முடியும். 

பாஜகவின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். லாலுவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள், வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.மருத்துவமனையில் உள்ள லாலுவை சந்திப்பதற்காக, தேஜஸ்வி சனிக்கிழமை சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. லாலுவை சந்திக்க பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று சர்வாதிகார பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று ராப்ரி தேவி அந்த விடியோவில் கூறியுள்ளார். சனிக்கிழமைதோறும் லாலுவை சந்திக்க அதிகபட்சம் 3 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், சட்டம்-ஒழுங்கு காரணத்தை கூறி, அந்த சந்திப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து முறையிட ஆர்ஜேடி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

பாஜக மறுப்பு: 

இதனிடையே, ராப்ரி தேவியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது; அபத்தமானது என்று பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறுகையில், "லாலுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. உண்மையில், இரு கட்ட தேர்தல்களுக்கு பிறகு, ஆர்ஜேடிதான் தோல்வி பீதியில் உள்ளது  என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications







Thoothukudi Business Directory