» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென்மேற்குப் பருவ மழை சராசரியான அளவில் இருக்கும்: இந்திய வானிலை மையம்

திங்கள் 15, ஏப்ரல் 2019 5:28:31 PM (IST)

"தென்மேற்குப் பருவ மழை சராசரியாக 96% பெய்யயும் எனவும், இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவே பெய்யவும் வாய்ப்பு உள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழையின் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கணித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் - செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு வழக்கமான அளவில் சராசரியாகப் பெய்யும். தற்போதைய நிலவரப்படி, தென்மேற்குப் பருவ மழை சராசரியாக 96% பெய்ய வாய்ப்பிருக்கிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவே பெய்யவும் வாய்ப்பு உள்ளது. 

எல் நினோ பலவீனத்தினால் பருவ மழை காலத்தின் இறுதிப் பகுதி வலுக்குறையும் வாய்ப்பும் உள்ளது. நிலப்பரப்பின் மீதான தெட்பவெப்பநிலை, பசிபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி என அனைத்தும் பருவ மழைக் காலத்தின் மீது எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் பரவலாக சராசரியான மழையைப் பெறும் என்றும், காரீப் விளைச்சலை நிச்சயம் இது உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Joseph Marketing

CSC Computer Education


Anbu Communications

New Shape Tailors

Black Forest Cakes



Thoothukudi Business Directory