» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ் புத்தாண்டு: குடியரசு தலைவர், பிரதமர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஞாயிறு 14, ஏப்ரல் 2019 10:14:31 PM (IST)

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். சித்திரை திங்கள் முதல் நாள் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விகாரி வருடம்  இன்று பிறந்துள்ள இன்று தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தமிழ் மக்களும் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழர்களுக்கு தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து மடலில், ”தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழில் தெரிவித்துள்ள வாழ்த்தில், தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி வாழ்த்து

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டரில்,”புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இவர்களைத் தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரைத்துரை, விளையாட்டுத்துறை பிரமுகர்களும் தங்களது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

MakkalApr 14, 2019 - 10:20:42 PM | Posted IP 162.1*****

Thank u modiji.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
CSC Computer Education

Anbu Communications
Thoothukudi Business Directory