» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தை மாத வளர்பிறை கடைசி முகூர்த்தம்: குருவாயூர் கோவிலில் ஒரேநாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம்

திங்கள் 11, பிப்ரவரி 2019 12:25:33 PM (IST)

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூர் கோவிலில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. அதே போல குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் அதிக அளவு நடைபெறும். கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குருவாயூர் கோவிலில் வந்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று குருவாயூர் கோவிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. தை மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தம் என்பதால் இந்த அளவுக்கு திருமணம் அங்கு நடைபெற்று உள்ளது. முகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரத்தில் 207 ஜோடிகளும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அதேபோல நேற்று ஒரே நாளில் 851 குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் நடந்தது. இதன் காரணமாக திருமண வீட்டாரும், பக்தர்களும் திரண்டதால் குருவாயூர் கோவிலில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

New Shape Tailors

Anbu Communications




Thoothukudi Business Directory