» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய - ப.சிதம்பரம் டுவீட்

ஞாயிறு 10, பிப்ரவரி 2019 4:41:19 PM (IST)

பணமதிப்பு நீக்கம் செய்த பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தது நினைவிருக்கிறதா? பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 50,000 குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன என்றும் 5 இலட்சம் பேர் வேலையிழந்தனர் என்றும் கூறினார். பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. 

ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்த தொழில்களை நசுக்கியது யார்? ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக்கோமாளித்தனமாக அமுல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத  சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.


மக்கள் கருத்து

சாமிFeb 10, 2019 - 09:28:24 PM | Posted IP 162.1*****

திருடன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications

New Shape Tailors




Thoothukudi Business Directory