» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

வெள்ளி 11, ஜனவரி 2019 7:03:49 PM (IST)

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை கிளப்பிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தற்போது மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடியை அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. சாரதா குழுமம் தொலைக்காட்சி வாங்குவதற்கு ரூ. 42 கோடி செலவில் நடைபெற்ற ஏற்பாடுகளுக்கு சட்ட உதவிகளையும் நளினி சிதம்பரம் செய்தததாகவும், அதற்காக சாரதா குழுமம் அவருக்கு ரூ. 1.30 கோடி பணத்தை கட்டணமாக வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இணைந்து நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிபிஐ, நளினி சிதம்பரம் மீது இன்று சிபிஐ கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory