» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுப்பு : கனிமொழி கண்டனம்

வெள்ளி 11, ஜனவரி 2019 3:50:31 PM (IST)

மும்பை விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழக மாணவருக்கு இமிகிரேஷன் மறுக்கப்பட்டதற்கு மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் இமிகிரேஷன் மறுக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநில மக்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஆப்ரகாம் சாமுவேல் இரண்டு நாட்களுக்கு முன் நியூயார்க் செல்வதற்காக மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த குடியேற்றப் பிரிவு அதிகாரி அவரிடம் இந்தியில் பேசி இருக்கிறார். ஆனால் இந்தி தெரியாத, ஆப்ரகாம் சாமுவேல் அந்த அதிகாரியை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மொழி வெறி பிடித்த அதிகாரி, இந்தி தெரியாது என்றால் தமிழ்நாட்டிற்கே போ, என்று கோபமாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டிவிட் செய்திருக்கும் ஆப்ரகாம் சாமுவேல், பிரதமர் மோடியிடம் புகாரும் அளித்துள்ளார். இதற்கு தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் இதுகுறித்து செய்துள்ள டிவிட்டில் "நான் ஓர் இந்திய பெண்..நான் இந்தி பேச மாட்டேன்" என்று மிகவும் கோபமாக குறிப்பிட்டுள்ளார். "நாங்க இப்படித்தான் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று பணியில் கனிமொழி டிவிட் செய்துள்ளார். கனிமொழியின் இந்த டிவிட் வைரலாகி உள்ளது. கனிமொழி கொடுத்தது நெத்தியடி பதில் என்று பலர் கூறியுள்ளனர். இவர், எங்கே அப்பாவி மக்களின் குரல்வளைகள் நெறிக்கப்படுகிறதோ அங்கே ஓங்கி ஒலித்து அதிகார வர்க்கத்தை அலறவிடும் அக்கா கனிமொழியின் குரல்" என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து

சாமிJan 12, 2019 - 02:12:17 PM | Posted IP 141.1*****

நடந்தது விரும்பத்தகாத ஒன்று - அதில் விளம்பரம் தேடுகிறார் இந்த நாயகி - தமிழகத்தில் பேசி பழக, இனிய தமிழ் - பாரதம் முழுதும் பழக, இந்தி, உலகம் சுற்றிவர, ஆங்கிலம் - இம்மூன்றும் கற்பது நல்லதே. அரசியல்வியாதிகள் சொல்வதை கேட்டு இதை செயல் இருந்தால் - படும் அவஸ்தைகளை - சிரமப்படுபவர்களிடம் (ஏராளமானோர்) - கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - உங்கள் தலைமுறையை வாழவிடுங்கள்

நிஹாJan 12, 2019 - 01:41:35 PM | Posted IP 162.1*****

ஹிந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதை கட்டாயமாக திணிக்காதீர்கள், பிறர் தாய் மொழியை ஓரங்கட்டாதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

ஒருவன்Jan 11, 2019 - 04:51:52 PM | Posted IP 162.1*****

அது சரி . வடை நாட்டு குந்திக்காரனுக்கு (இந்தி வெறி பிடித்தவனுக்கு ) ஆங்கிலம் சரியாக தெரியாது என்பது உண்மை ..

தமிழன்Jan 11, 2019 - 04:24:10 PM | Posted IP 162.1*****

இப்படி தூண்டி விட்டு தூண்டி விட்டு, எங்களை ஹிந்தி படிக்கவிடாமல் செய்து, உங்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் ஹிந்து படித்துள்ளனரே அக்கா.... என்ன நியாயம்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications
Thoothukudi Business Directory