» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்

வியாழன் 6, டிசம்பர் 2018 4:30:43 PM (IST)

மேகதாது அணை தொடர்பாகப் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கக் கோரித் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக, தமிழக மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படும் காவிரியாறு இரு மாநிலங்களுக்கும் உயிர்நாடியாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இரு மாநில அரசுகளும் மக்களும் காவிரிச் சிக்கலுக்கு நிலையான தீர்வுகாண விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் இணக்கமான தீர்வுகாணக் கர்நாடக அரசு விரும்புவதாக அவர் கூறியுள்ளார். 

பருவமழை அதிகமாகப் பொழியும் காலத்தில் மேட்டூர் அணை நிரம்பி வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த மேகதாது அணைத்திட்டம் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றித் தமிழக அரசிடமும் மக்களிடமும் தவறான கருத்து உள்ளதாகவும், அதே நேரத்தில் உண்மை வேறானது என்றும் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். அணைத் திட்டம் தொடர்பான தகவல்களை வழங்கவும் அதுபற்றிப் பேசவும் நேரம் ஒதுக்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கோரியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticalsJoseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape TailorsThoothukudi Business Directory