» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கடற்படைக்கு 50 கோடி டாலர் செலவில் 2 போர் கப்பல்கள்: தொழில்நுட்பம் வழங்க ரஷ்யா ஒப்பந்தம்

புதன் 21, நவம்பர் 2018 12:11:42 PM (IST)

இந்திய கடற்படைக்கு 50 கோடி டாலர் செலவில் இரண்டு போர் கப்பல்களை தயாரிக்க இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோவாவில் உள்ள பாதுகாப்பு துறை சார்ந்த பொது துறை நிறுவனமான ஜி.எஸ்.எல் (GSL) எனப்படும் கோவா ஷிப்யார்ட் டிமிட்டெட் (Goa Shipyard Ltd) மற்றும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோசோபோரோனெக்ஸ் போர்ட் (Rosoboronexport) நிறுவனம் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.  

இந்த ஒப்பந்தத்தின் கீழ் போர் கப்பல்களுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் சில முக்கிய தொழில் நுட்ப விஷயங்களை ரஷ்யா வழங்கும். அதன் அடிப்படையில் கோவாவில் இரு போர் கப்பல்களும் உருவாக்கப்படும். இந்த இரு போர் கப்பல்களின் கட்டுமானம் 2020ம் ஆண்டு துவங்கும். முதல் கப்பல் 2026ம் ஆண்டிலும் இரண்டாம் கப்பல் 2027ம் ஆண்டிலும் கட்டுமானப் பணி முடியும் என ஜி.எஸ்.எல் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சேகர் மிட்டல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Nov 22, 2018 - 04:53:13 AM | Posted IP 172.6*****

இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் வெளிநாட்டில் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் .. மேக் இந்த இந்தியா திட்டம் கொண்டு வந்த கிழவன் உலகம் சுற்றும் வடை நாட்டு குஜராத்தி கிழவன் மோடி எல்லாம் சும்மா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

New Shape Tailors


CSC Computer Education


Anbu Communications
Thoothukudi Business Directory