» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பது வெற்று வாக்குறுதியா?: பாஜகவுக்கு சிவசேனா கேள்வி

புதன் 21, நவம்பர் 2018 11:08:03 AM (IST)

ராமர் கோவில் கட்டுவோம் என்பது வெற்று வாக்குறுதியா? என்று மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக செவ்வாயன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பதைப் போல, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதும் வெற்று வாக்குறுதிதானா? இந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று நாம் நிஜமாகவே நம்புகிறோம்.

குறிப்பாக இந்த விஷயமானது தேர்தல்கள் வரும்போது மட்டுமே பேசப்படுகிறது; பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த மாதம் 18-ஆம் தேதியன்று உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும் போது, நவமபர் 25-ஆம் தேதியன்று அயோத்திக்கு செல்லப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes



Thoothukudi Business Directory