» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப் அமிர்தசரசில் நிகழ்ந்த ரயில் விபத்து : உயிரிழப்பு அறுபத்தொன்றாக உயர்வு

சனி 20, அக்டோபர் 2018 1:21:44 PM (IST)
அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 61 உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோதா பதக்கில் ராவணனின் உருவபொம்மை எரிக்கும் நிகழ்ச்சி  ரயில் பாதையின் அருகே நேற்று நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ரயில் பாதையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதன்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் ஒலி எழுப்பிக் கொண்டே வந்தது. ஆனால் தசரா கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் ரயில் வருவதைக் கவனிக்கவில்லை. இந்நிலையில் அதிவேகமாக வந்த ரயில் பொதுமக்கள் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் பலி தற்போது 61 பேராக உயர்ந்துள்ளதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக பஞ்சாப் அமிர்தரஸ் மருத்துவமனை தலைமை அதிகாரி அறிவித்துள்ளார். மிர்தசரஸ் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDJoseph MarketingNew Shape Tailors


crescentopticalsThoothukudi Business Directory