» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமிருதசரஸ் ரயில் விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சனி 20, அக்டோபர் 2018 10:44:32 AM (IST)



அமிருதசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில்: ரயில் விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அதிகாரிகள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று சுட்டுரையில் பதிவு வெளியிட்டுள்ளார். இது போல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது பதிவில் இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பஞ்சாப் அரசுக்கு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார். பாஜக தலைவர் அமித் ஷா உள்பட மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

crescentopticals



Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory