» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

வெள்ளி 12, அக்டோபர் 2018 1:00:35 PM (IST)

வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அண்மையில் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்கக்கூடாது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் வார நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மட்டும் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் நாட்டில் உள்ள 24 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிகளவு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவற்றை விசாரித்து தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நீதிமன்றங்கள் உள்ளன. இந்நிலையில் நீதித்துறை பணிச்சுமையில் இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என அனைத்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors





Thoothukudi Business Directory