» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருநங்கைகளுக்கு மரியாதை செய்த கிரிக்கெட் வீரர் கவுதம்கம்பீர் : வைரலாகும் புகைப்படம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 6:34:11 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நெற்றியில் பெரிய பொட்டுடன் துப்பட்டா வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். இவர் களத்தில் ஆக்ரோஷமாக ஆடுவதற்கு பெயர் போனவர். சமீபத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான 377 என்ற சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கொண்டாடும் வகையில் திருநங்கைகள் நடத்திய ஹிஜ்ரா ஹப்பா என்ற நிகழ்ச்சியில் கம்பீர் பங்குபெற்றார். அலெயென்ஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த விழாவை கவுதம் கம்பீர் தொடங்கிவைத்தார். 

இதில் ஒரு பாதை வழியே உள்ளே செல்ல வேண்டும். அதில் உள்ளே சென்ற கம்பீர் துப்பட்டா மற்றும் பெரிய பொட்டுடன் வெளியே வந்தார். திருநங்கைகளாகவும், திருநம்பிகளாகவும் இருப்பது எப்படி இருக்கும் என்பதை ஒருவரை உணர்ச் செயவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த புகைப்படம் வைரலாக சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

CSC Computer Education

New Shape Tailors


Joseph Marketing



Thoothukudi Business Directory