» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:50:26 PM (IST)

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1994ம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் தொழில்நுட்பங்களை அளித்ததாக, கேரள காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நம்பி நாராயணன் நிரபராதி என சிபிஐ விசாரணையில் உறுதியான நிலையில், தன் மீது பொய் வழக்குப் போட்டதற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரு.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும், தவறான வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தவறான வழக்குப் பதிவு செய்த காவல்துறை மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுக்குமாறு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph Marketing



Thoothukudi Business Directory