» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 4:02:02 PM (IST)

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

New Shape Tailors

Anbu Communications


CSC Computer Education


Black Forest Cakes

Joseph Marketing



Thoothukudi Business Directory