» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்: எல்லையில் பதற்றம்

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 12:22:19 PM (IST)

இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.இதனால், ஏற்பட்ட சிறிய மோதலில் இரு தரப்பு நாட்டு ராணுவத்தினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. 

அதன் பின், இந்தியா, சீன தூதரக மட்டத்தில் நடந்த சுமுக பேச்சுக்கு பின், இரு நாடுகளும் தங்களின் படைகளை வாபஸ் பெற்றன.தொடர்ந்து டோக்லாம் எல்லையில் கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்தன. கடந்த ஜூலை மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதால் சீன வீரர்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், சீனா மீண்டும் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் உள்ள டெம்சாக் பகுதியில் 400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 டென்ட்களை அமைத்துள்ளது. அதன்பின்னர் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 டென்ட்களை சீன ராணுவம் அகற்றியது. மீதமுள்ள இரண்டு டென்ட்டுகளை சீன வீரர்கள் இன்னும் தங்கியிருக்கின்றனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

Joseph Marketing


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory