» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் : உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 10:50:29 AM (IST)



சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக காகித்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


crescentopticals




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory