» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை நான்கு மடங்கு குறைந்தது

திங்கள் 13, ஆகஸ்ட் 2018 6:24:23 PM (IST)

திருப்பதி கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் காரணமாக, அதன் உண்டியல் காணிக்கை நான்கு மடங்கு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆகம விதிகளின்படி நடைபெறும் திருப்பதி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேக திருவிழா, தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16 ஆம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு 30,000 பக்தர்கள் மட்டுமே திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், தங்கம், வைரம், வெள்ளி, பணம் என நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி வரை உண்டியல் காணிக்கை வரும் திருப்பதி கோவிலில், நேற்று வெறும் 73 லட்சம் ரூபாய் மட்டுமே காணிக்கையாக கிடைத்ததாக தெரி விக்கப்பட்டுள்ளது. இது சராசரி அளவை விட நான்கு மடங்கு குறைவாகும். இந்த அளவிற்கு குறைவான காணிக்கையைப் பெற்றதில்லை என தேவஸ்தா னம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals





Thoothukudi Business Directory