» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்களவைத் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு: பிரதமர் மோடி வாழ்த்து

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 4:13:59 PM (IST)

மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர். அதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் ஹரிபிரசாத்துக்கு 105 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 

பத்திரிக்கையாளர் 

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயணன், பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் இந்தி பத்திரிகையாளராக பணியாற்றியவர். ஜூன் 30, 1956-ல் உபி மற்றும் பிஹாருக்கு இடையே உள்ள சிதாப் டயாரா எனும் கிராமத்தில் பிறந்தவர் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பட்டமேற்படிப்பு முடிந்தவர் பிஹாரின் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர். இதனால், கடந்த ஏப்ரல் 2014-ல் பிஹார் மாநிலம் சார்பில் அதன் ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தினால் மாநிலங்களவை எம்பியானார்.

முன்னதாக, டைம்ஸ் குழுமத்தின் ‘தர்மயுக்’ எனும் இந்தி பத்திரிகையில் பணியாற்றினார். அதன் பிறகு பாங்க் ஆப் இந்தியாவின் அலுவலராக 1984 வரை பணியாற்றினார். தொடர்ந்து 1989 வரை மும்பையின் ‘ரிவைவர்’ பத்திரிகை மற்றும் ஜார்கண்டின் ‘பிரபாத் கபர்’ நாளிதழ் ஆகியவற்றின் துணை ஆசிரியராகவும் ஹரிவன்ஷ் பணியாற்றினார். தாம் எம்பியாவது வரை சுமார் 40 ஆண்டுகள் பத்திரிகையளரான ஹரிவன்ஷ் இடையில், பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு கூடுதல் தகவல் ஆலோசகராகவும் இருந்தார்.

பிரதமர் வாழ்த்து

இதனிடையே மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஹரிவன்ஷ் நாராயண் சிங் முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory