» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 10:49:35 AM (IST)

ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது என்று திபெத்திய மதகுரு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

கோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தலாய் லாமா அளித்த பதில் வருமாறு: நிலபிரபுத்துவ முறையில் அதிகாரங்கள் சில நபர்களின் கைகளிலேயே இருக்கும். இது மிகவும் ஆபத்தாகும். இதனால், நிலபிரபுத்துவ முறையைக் காட்டிலும், ஜனநாயக முறையே சிறந்தது என்பது எனது கருத்தாகும்.

இந்திய பிரதமராக முகமது அலி ஜின்னா (பாகிஸ்தான் நிறுவனர்) பதவியேற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். இந்திய பிரதமராக ஜின்னா பதவியேற்றால், நாடு இரண்டாக பிளவுபடாது என்று காந்தி நினைத்தார். ஆனால் இதை ஜவாஹர்லால் நேரு ஏற்கவில்லை. பிரதமராக தாம் பதவியேற்க வேண்டும் என்று நேருவுக்கு இருந்த சுயவிருப்பமே இதற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மகாத்மா காந்தி நினைத்தது போல், இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தார் எனில், இந்திய பிரிவினையே நடந்திருக்காது. ஜவாஹர்லால் நேருவை நான் நன்கறிவேன். அவர் நல்ல அனுபவசாலி; நல்ல மனிதரும் கூட. ஆனால், சில நேரங்களில் அவரும் தவறுகள் செய்துள்ளார் என்று தலாய் லாமா கூறினார். அப்போது தலாய் லாமாவிடம் உங்களது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான நாள்களாக எதை கருதுகிறீர்கள்? என்று ஒரு மாணவர் கேள்வியெழுப்பினார். அதற்கு தலாய் லாமா பதிலளிக்கையில், 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து எனது ஆதரவாளர்களுடன் தப்பி வந்த நிகழ்வையே மிகவும் ஆபத்தான நாள்களாக கருதுகிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam


New Shape Tailors


Joseph Marketing


CSC Computer Education
Thoothukudi Business Directory