» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருணாநிதியின் இறுதிச்சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது - மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

புதன் 8, ஆகஸ்ட் 2018 4:43:37 PM (IST)

கருணாநிதியின் இறுதிசடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
 
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. 

இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு  வழங்கியது. இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என முடிவு எடுத்து கோர்ட்டில் அறிவித்தது. ஆனால்  டிராபிக் ராமசாமி  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக மேல்முறையீடு  செய்யப்பட்டது. மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய கோரிக்கையை உச்சநீதிமன்றம்  நிராகரித்தது. மேலும் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory