» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்

வியாழன் 12, ஜூலை 2018 7:09:18 PM (IST)

ஜூலை 15-ஆம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் ஜூலை 14-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது தடை விதித்து  உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு கட்டாயம் அமல்படுத்தப்பட்டு, 50 மைக்ரானுக்கும் கீழான பிளாஸ்டிக் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் வரை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பொது இடத்தில் புகை பிடித்தல், குட்கா பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதுபோல சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பிளாஸ்டிக் பெட்டிகள் அல்லது பைகளில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.மேலும், 50 மைக்ரானுக்கு மேலான பிளாஸ்டிக் வைத்திருக்கும் கடைகள் அதற்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அப்பகுதி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


crescentopticals






Thoothukudi Business Directory