» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜனதா மீண்டும் வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும்: சசிதரூர் ச்ச்சை பேச்சு

வியாழன் 12, ஜூலை 2018 3:56:23 PM (IST)

பா.ஜனதா வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்ற கருத்தையடுத்து சசிதரூரை காங்கிரஸ் எச்சரித்துள்ளது. 

கேரளாவில் நிகழ்ச்சியொன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா இப்போது உள்ள பலத்துடன் வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியாவின் அரசியலமைப்பை கிழித்து எரியும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும். சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காத ஒரு பாகிஸ்தான் உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். 

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும் சசிதரூர், பா.ஜனதா உண்மையிலே இந்து ராஷ்டிரா என்ற கொள்கை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அதனை ஆவணப்படுத்தி தரவேண்டும், மதசார்பற்ற குடியரசு என்பதால் இந்து ராஷ்டிரா என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என தெரிவிக்க வேண்டும், இதனால் இப்போது ஏற்பட்டுள்ள விவாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, சசிதரூரை எச்சரித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing




Thoothukudi Business Directory