» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாஜ்மஹால் பாதுகாப்பில் அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதன் 11, ஜூலை 2018 3:59:39 PM (IST)

தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை உரியமுறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கு தொடர்பாக தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் பிறக்கப்பட்டபோதிலும் அவற்றை செயல்படுத்தவில்லை. தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ‘‘உலகின் அரிய பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து வருகை தருகின்றனர். இதன் மூலம் பெரிய அளவில் அந்நிய செலவாணியை மத்திய அரசு ஈட்டி வருகிறது. ஈபில் டவர் உட்பட பிறநாடுகளில் உள்ள உலக அதிசயங்களை பாதுகாக்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் தாஜ்மஹாலை பாதுகாக்க அத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் எத்தனையோ அதிசய பொக்கிஷங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கது. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டும் இழப்பல்ல. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இழப்புதான். தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம். தாஜ்மஹால் பாதுகாப்பில் உரிய அக்கறையின்றி மத்திய அரசு செயல்படுகிறது. அதுபோலவே தாஜ்மஹாலை பாதுகாக்க நீண்டகால அடிப்படையில் திட்டத்தை உத்தர பிரதேச அரசு தயாரிக்கவில்லை. இந்த அக்கறை இன்மையால் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குரியாகி வருகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory