» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் எம்.பி ரெங்கராஜன் கேவியட் மனு தாக்கல்

புதன் 11, ஜூலை 2018 2:06:47 PM (IST)

தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி ரெங்கராஜன் சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட்தேர்வில் மொழிபெயர்ப்பு காரணமாக தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.மே 6-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடத்தில் 10 வினாக்கள், வேதியியலில் 6 வினாக்கள், உயிரியலில் 33 வினாக்கள் உள்பட 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 

இதனால் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இம்மனுவை  விசாரித்த நீதிபதிகள் 196 மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் எம்.பி ரெங்கராஜன் எம்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ எந்த நேரமும் மேல்மு றையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்களது தரப்பினைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்றுஅந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals


New Shape Tailors





Thoothukudi Business Directory