» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்
புதன் 11, ஜூலை 2018 12:38:08 PM (IST)
பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த நேர்ந்தால் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது. அதில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட என்னென்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓட்டுப்பதிவு நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மடங்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். அதற்கும் கணிசமான தொகை செலவாகும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். அப்படி கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க வேண்டும். எனவே 15 ஆண்டுகளுக்கு ஒரு தடவை எந்திரங்களுக்கே சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.
மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும்.2024-ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!!
புதன் 20, பிப்ரவரி 2019 5:51:27 PM (IST)

அயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 5:46:17 PM (IST)

பலவீனமாக உள்ள பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது : தமிழக கூட்டணி குறித்து மாயாவதி கருத்து!!
புதன் 20, பிப்ரவரி 2019 5:33:11 PM (IST)

டெல்லியில் பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதன் 20, பிப்ரவரி 2019 4:19:20 PM (IST)

அனில் அம்பானி 450 கோடி செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதன் 20, பிப்ரவரி 2019 11:44:26 AM (IST)

சாகச ஒத்திகையின்போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதல் - விமானி பலி
புதன் 20, பிப்ரவரி 2019 8:18:31 AM (IST)
