» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் 15 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் நாடு..!!

புதன் 11, ஜூலை 2018 12:05:36 PM (IST)

தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் இருந்து வந்த தமிழ் நாடு 15 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் எவை என்ற மூன்றாம் பதிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையிடம் உள்ள தரவுகளின் படி இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை பிடிக்கும் என்று எதிர்பார்த்துப் போன்று ஆந்திரா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. 

இந்த பட்டியலில் தெலுங்கானா அரசு இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தினை ஹரியானா பிடித்துள்ளது. தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் முதலாம் இடத்தினைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்கண்ட் 4 வது இடத்தினையும், குஜராத் 5 வது இடத்தினையும் பிடித்துள்ளது. சட்டிஷ்கர் 6வது இடத்தினையும், மத்திய பிரதேசம் 7வது இடத்தினைப் பிடித்துள்ளது. இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு அமைந்துள்ள கர்நாடகா தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் 8வது இடத்தினைப் பிடித்துள்ளது.

தொழில் துவங்க மற்றும் செய்ய ஏற்ற மாநில பட்டியலில் ராஜஸ்தான் 9வது இடத்தினைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களில் முதல் 5 இடத்திற்குள் இருந்து வந்த தமிழ்நாடு 15 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டியலில் மேற்கு வங்கம் - 10 வது இடம், உத்தர்காண்ட் - 11 வது இடம், உத்திர பிரதேசம் - 12 வது இடம், மகாராஷ்டிரா - 13 வது இடம், ஒதிஷா - 14வது இடம், அசாம் - 17வது இடம், பீகார் - 18வது இடம், கோவா - 19வது இடம், பஞ்சாப் - 20வது இடம் பிடித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Joseph Marketing


New Shape Tailors






Thoothukudi Business Directory