» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக புகார்: கேரளாவில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு

புதன் 11, ஜூலை 2018 10:44:07 AM (IST)

கேரளாவில் பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக புகாரின் அடிப்படையில், பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், காயபல்லிகரன்மா என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பணியாற்றி வந்த பினு ஜார்ஜ், 4 ஆண்டுகளுக்கு முன் இப்பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காயங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், "கடந்த 2014-ல் குடும்ப பிரச்சினை குறித்து விவாதிக்க பினு ஜார்ஜின் அலுவலகம் சென்றபோது, அவர் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார். 

தேவாலய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தபோது, பினு ஜார்ஜிடமிருந்து இனி வரும்காலத்தில் எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என உறுதி அளித்தனர். என்றாலும் பினு ஜார்ஜ் தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். எனவே சட்டரீதியாக புகார் அளிக்க முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். இப்புகார் தொடர்பாக பினு ஜார்ஜ் மீது காயங்குளம் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது வேறு இடத்தில் பணியாற்றி வரும் அவரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam


CSC Computer Education

New Shape Tailors

Anbu Communications


Joseph MarketingThoothukudi Business Directory