» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கோச்சடையான் பட வழக்கை எதிர்கொள்ளவேண்டும்: லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 10, ஜூலை 2018 5:07:06 PM (IST)
கோச்சடையான் பட வழக்கை எதிர்கொள்ளவேண்டும் என லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பின்னர் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் தலைமையிலான குளோபல் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகை ரூ. 6. 20 கோடியை ஆட் -பீரோ" நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர். பானுமதி அமர்வு முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட் -பீரோ" நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் இன்னும் வழங்கவில்லை" என்றார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆட் பீரோ" நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை லதா ரஜினிகாந்த் ஏன் வழங்கவில்லை?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது லதா ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன், லதா ரஜினிகாந்தின் ஒப்புதல் இல்லாமல் உறுதிமொழியை முன்பிருந்த வழக்கறிஞர் பதிவு செய்துள்ளார்" என்றார். இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் ஜூலை 10-ஆம் தேதி இறுதி விசாரணையின் போது பணத்தை திரும்பச் செலுத்த தயாராக உள்ளீர்களா என்பது குறித்து இறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு குறித்த விசாரணையைத் தொடர உத்தரவிட வேண்டி வரும்" என்றுஎச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து,வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிற பெங்களூர் நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. லதா ரஜினிகாந்த், பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளுக்கு இரண்டு தவணையாக நிதியுதவி வழங்கப்படும் : மத்திய அரசு அறிவிப்பு
திங்கள் 18, பிப்ரவரி 2019 1:44:40 PM (IST)

பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:15:29 PM (IST)

வலுவான பாரதீய ஜனதா கூட்டணி அரசினால் வளர்ச்சி திட்டங்கள் சாத்தியமானது : பிரதமர் மோடி பெருமிதம்!
திங்கள் 18, பிப்ரவரி 2019 11:31:22 AM (IST)

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்று விட்டது: மன்மோகன் சிங் தாக்கு
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:45:35 AM (IST)

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரியா விடை: சொந்த ஊர்களில் கண்ணீர் அஞ்சலி
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:59:19 AM (IST)

வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு
சனி 16, பிப்ரவரி 2019 5:24:09 PM (IST)
