» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறக்க முதல்வர் குமாரசாமி உத்தரவு

செவ்வாய் 10, ஜூலை 2018 3:51:36 PM (IST)

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று உத்தரவிட்டு உள்ளார்.

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் மைசூரு, மாண்டி மாவட்ட விவசாயிகளுக்கு போக 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீரை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று உத்தரவிட்டு உள்ளார். ஆனால் எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவிக்கவில்லை. என்றாலும் இன்று மாலை முதல் மேலும் நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals



New Shape Tailors


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory