» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதி விமலா நீக்கம்: புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்!!

புதன் 27, ஜூன் 2018 12:15:53 PM (IST)

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலாவை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டு புதிய நீதிபதியை நியமித்தது.

எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சில மாதங்களுக்கு பிறகு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரது தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14-ம் தேதி வழங்கப்பட்டது. 

அப்போது 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3–வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3–வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, ‘இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தால் காலதாமதமாகும் என்றும், இதனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சய் கிசன் கவுல் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் தகுதிநீக்க வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3-ஆவது நீதிபதி விமலாவை நீக்கியது. அவருக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: 

இந்த வழக்கில் மேலும் சர்ச்சை ஏற்படாமல் இருப்பதற்காக 3-ஆவது நீதிபதியாக விமலாவுக்கு பதில் சத்தியநாராயணன் பெயரை பரிந்துரை செய்கிறோம்.  இந்த வழக்கின் மீதான விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதி வழங்கும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக இருக்கும். உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற டிடிவி ஆதரவாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.3-ஆவது நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை தகுதி நீக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரும்ப பெறவேண்டும் எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியானது அல்ல. நீதிபதி மீது இதுபோன்று குற்றச்சாட்டுகளை சுமத்தி மனு தாக்கல் செய்யக்கூடாது. 


மக்கள் கருத்து

பாலகுமாரன்Jun 27, 2018 - 05:16:31 PM | Posted IP 172.6*****

வழக்கை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education

Joseph Marketing



Black Forest Cakes

New Shape Tailors




Thoothukudi Business Directory