» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய பிரதேசத்தில் ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து; 12 பேர் உயிரிழப்பு - 6பேர் படுகாயம்!!

வியாழன் 21, ஜூன் 2018 12:29:01 PM (IST)

மத்திய பிரதேசத்தில் ஜீப் ஒன்றின் மீது டிராக்டர் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  

மத்திய பிரதேசத்தில் மொரீனா நகரில் கஞ்ராம்பூர் கிராமம் அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஒரே குடும்பத்தினை சேர்ந்த 20 பேர் வரை அந்த ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 6 மணியளவில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று ஜீப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஜீப்பில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்தனர்.  

காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். டிராக்டரில் சட்டவிரோத முறையில் தேசிய சம்பல் சரணாலயத்தில் இருந்து மணல் கடத்தி வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.  டிராக்டரின் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார்.  இதுகுறித்து உள்ளூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape TailorsThoothukudi Business Directory