» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடிதான் எனக்கு ராமர் என்கிறார் ஜசோதா பென் : ம.பி. ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி!

வியாழன் 21, ஜூன் 2018 11:56:27 AM (IST)

மோடி திருமணமாகாதவர் என்று கூறிய மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மோடியின் மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார்.

குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மத்தியப் பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் பட்டேல், சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி திருமணமாகாதவர் என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், மோடியின் மனைவி ஜசோதாபென் இது குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

செல்போன் விடியோ மூலம் பேசியுள்ள மோடியின் மனைவி ஜசோதா பென், நரேந்திர மோடிக்கு திருமணமாகவில்லை என்று ஆனந்திபென் பட்டேல் கூறியிருப்பதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு திருமணமாகிவிட்டது என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதில் எனது பெயரையும் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes

New Shape Tailors


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory