» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகை மாயம்: முன்னாள் தலைமை அர்ச்சகர், எம்.பி.க்கு நோட்டீஸ்!!

வியாழன் 14, ஜூன் 2018 4:27:41 PM (IST)

திருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். இவர் திருப்பதி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நியமனம் நடக்கவில்லை, பூஜைகள் சரியாக செய்யவில்லை என்றும் ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணவில்லை என்றும் பல்வேறு புகார்கள் கூறினார்.

இதற்கிடையே திருப்பதி கோவிலில் அர்ச்சகருக்கு ஓய்வு வயதை 65 ஆக தேவஸ்தானம் நிர்ணயித்தது. அதன்படி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரருக்கு கட்டாய ஓய்வு அளித்தது திருப்பதி தேவஸ்தானம் மீது புகார்கள் கூறியதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறினார்.இவ்விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டியும் புகார் கூறினார்.

அவர் கூறும் போது, திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார். இந்த நிலையில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாக புண்படும் படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors



Thoothukudi Business Directory