» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலை: பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

வியாழன் 14, ஜூன் 2018 10:22:30 AM (IST)

கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.  

இதைத்தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இருவாரங்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. 14 நாட்களாக தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று (ஜூன் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing




New Shape Tailors

crescentopticals





Thoothukudi Business Directory