» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்த தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்!!

புதன் 13, ஜூன் 2018 5:23:09 PM (IST)



ஆக்ராவில் சாலைப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பரேபூர் சாலையில் சாலை அமைக்கும் பணியின்போது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





New Shape Tailors




Thoothukudi Business Directory