» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடகஅரசுக்கு மத்தியஅரசு முக்கிய கடிதம்

செவ்வாய் 12, ஜூன் 2018 8:03:36 PM (IST)

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

பலத்த பிரச்சனைகளுக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதில் தமிழகம் மேலாண்மை வாரியம் அமைக்கும் உறுப்பினர்களை மத்தியஅரசுக்கு பரிந்துரைத்து விட்ட நிலையில் கர்நாடகா இன்னும் உறுப்பினர்களை அறிவிக்கவில்லை.எனவே 12ம் தேதிக்குள் (இன்று) உறுப்பினர்களை அறிவிக்குமாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு கடிதம் எழுதியிருந்தது.

இருப்பினும் கரநாடகா தொடர்ந்து மெளம் சாதித்து வரும் நிலையில் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை பரிந்துரைக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. கர்நாடகாவை தவிர மற்ற 3 மாநிலங்களும் உறுப்பினர்கள் பட்டியலை வழங்கி உள்ளன என்பதும்  மத்திய நீர் ஆணைய தலைமை பொறியாளர் நவீன்குமாரை காவிரி நீர் மேலாண்மை ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing





Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



Thoothukudi Business Directory