» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி: சிதம்பரம் ட்விட்!!

சனி 19, மே 2018 3:40:33 PM (IST)

கர்நாடகத்தில் நீதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு: "பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவை காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எனது வணக்கங்கள். நீதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape TailorsThoothukudi Business Directory