» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

சனி 19, மே 2018 3:35:21 PM (IST)

எம்எல்ஏவாக பதவியேற்க உள்ள நிலையில், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை எடியூரப்பா, ராஜினாமா செய்தார். 

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும், அதே கட்சியை சேர்ந்த ஸ்ரீராமுலு மோலகல்மூர் தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த புட்டாராஜு மண்டியா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதைதொடர்ந்து, கர்நாடக முதல்வராக கடந்த 17-ம் தேதி பதவி ஏற்றுகொண்ட எடியூரப்பா இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்னதாக தனது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து ஸ்ரீராமுலு, புட்டாராஜு ஆகியோரும் தங்களது பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals





New Shape Tailors


Joseph Marketing



Thoothukudi Business Directory