» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடியில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி

செவ்வாய் 24, ஏப்ரல் 2018 12:42:17 PM (IST)

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு  இந்திய ராணுவம் அளித்த பதிலடியில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ராணுவ முகாம்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து, அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பேர் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory