» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு

சனி 21, ஏப்ரல் 2018 7:57:18 PM (IST)

புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 மணி நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் பகீரத் பேலஸ் என்ற பகுதி உள்ளது.  இங்கு மின்னணு மற்றும் மின்சார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்து ள்ளன.  இந்த நிலையில் இன்று மதியம் திடீரென இங்கு தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து தில்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

உடனடியாக 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியை தொடங்கியது. 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals
Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory