» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணமதிப்பிழப்புக்குப் பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: புலனாய்வுப் பிரிவு திடுக்கிடும் தகவல்

சனி 21, ஏப்ரல் 2018 5:34:14 PM (IST)

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர் மதிப்புடைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததுடன் புதிய ரூ.2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். 

நாட்டில் உள்ள விவசாயிகள், சிறு நிறுவன அதிபர்களுக்கு மிகப்பெரிய துயரத்தை அளித்தது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதால், தங்களது ரூபாயை மாற்றுவதற்கும், தங்களுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்கும் வங்கிகள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. அப்போது வரிசையில் காத்திருந்த அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நாட்டின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்று சிலர் தெரிவித்திருந்தனர், ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், உயர் மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதிகயளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாக மத்திய அரசின் அங்கமான நிதி நுண்ணறிவு (புலனாய்வுப் பிரிவு) தெரிவித்துள்ளது. இதுகுறித்து புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களின் அளவு  2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் ரூ.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்றும் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும் சம்பவங்கள் குறைந்துவிட்டது. அதுவரை கல்வீச்சில் ஈடுபடுவதற்காக இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து வந்தவர்களிடம் பணம் இல்லாமல் போனது. அதன் காரணமாக அவர்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 8 முதல் 10 மாதங்கள் வரை 100 இளைஞர்களைக் கூட திரட்ட முடியவில்லை என்றும் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது நிலைமை மாறியிருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். 

பணமதிப்பிழப்பின் மூலம் கருப்புப் பண பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. கருப்புப் பண பிரச்னைக்கு எதிரான சரியான நடவடிக்கையும் அதுவல்ல. இதற்குப் பதிலாக, நமது வரி விதிப்பு முறை, பத்திரப்பதிவு, நிர்வாக அமைப்புகளை எளிமைப்படுத்த வேண்டும்.  இதுவொன்றுதான், கருப்புப் பண புழக்கத்தின் ஆதிக்கம் அதிகம் இல்லாமல் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கையாகும். பணமதிப்பிழப்பு முடிவின் தாக்கம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கருப்புப் பண பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

CSC Computer Education


New Shape TailorsThoothukudi Business Directory