» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சனி 21, ஏப்ரல் 2018 4:33:59 PM (IST)

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, பல்வேறு வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போக்சோ சட்டத்தைத் திருத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனை கடுமையாக மத்திய அரசு முடிவு செய்தது.

குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்தல், ஜாமீன் வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் வரையறுக்கவே  குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எனப்படும் போக்சோ கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை  அல்லது சில ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பது போன்ற அம்சங்கள் தான் இதுவரை இருந்தது.

எனவே, சட்ட திருத்தம் மேற்கொண்டு 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வகை செய்யப்பட உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் சிறார் குற்றவாளியாக இருந்தால் அவர்களுக்கு இந்த சட்டத் திருத்தத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுமா என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை. 

ஏற்கனவே நிர்பயா வழக்கில் மிக மோசமான குற்றம் இழைத்த முக்கியக் குற்றவாளி சிறார் என்று கூறி அவருக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டதும், கதுவா சம்பவத்தில் மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் சிறார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விளக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory