» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த 4 ஆண்டுகளாக எண்ணெய் வருமானத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!

சனி 21, ஏப்ரல் 2018 11:28:22 AM (IST)

கடந்த 4 ஆண்டுகளாக, எண்ணெய் வருமானத்தை நம்பி பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 22 மாநிலங்களில் தங்களது ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக பெருமையுடன் கூறுகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் அக்கட்சி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வராதது ஏன்?

கடந்த 4 ஆண்டுகளாக, பெட்ரோலியப் பொருள்களால் கிடைக்கும் வருமானத்தை நம்பி பாஜக அரசு வாழ்ந்துள்ளது. அந்த வருமானம் இல்லாவிட்டால், பாஜக அரசால் ஏதும் செய்ய இயலாது. ஏனென்றால், வரிச் சுமைகளை நுகர்வோர் மீது சுமத்த வேண்டும் என்பதே பாஜக அரசின் வரிக் கொள்கையாகும்.

4 ஆண்டுகளுக்கு முன் 105 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை தற்போது 74 டாலராகக் குறைந்து விட்டது. இருப்பினும், கடந்த 2014-ஆம் ஆண்டை விட பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது ஏன்? என்று அந்தச் சுட்டுரைப் பதிவில் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 73.83 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 64.69 காசுகளாகவும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதிலும், கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து 2016-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கலால் வரியை 9 மடங்கு மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் ஒருமுறை மட்டும் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை தற்போது ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்தப் பொருள்களை ஜிஎஸ்டி கவுன்சில், தங்களது வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஆசீர் விApr 21, 2018 - 12:04:42 PM | Posted IP 141.1*****

நிதர்சனமான உண்மை. முற்றிலும் உண்மை. மோடி ஒரு மாயை என்பது உண்மை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

CSC Computer Education

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


New Shape TailorsThoothukudi Business Directory