» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டில் பொருளாதார எமெர்ஜென்சியை கொண்டுவர முயற்சி நடக்கிறதா? மமதா பானர்ஜி கேள்வி

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:50:52 PM (IST)

நாட்டில் பொருளாதார எமெர்ஜென்சியை கொண்டுவர முயற்சி நடக்கிறதா? என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பணம் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென அதிக அளவில் பணத்தேவை கூடிவிட்டதுதான், பணத் தட்டுப்பாடுக்கு காரணம் எனவும், இந்த நிலை சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டுவிட்டரில் கூறுகையில், பல மாநிலங்களிலும் ஏடிஎம்களில் பணம் இல்லை. பெரிய பண மதிப்பு கொண்ட நோட்டுகள் மிஸ்சாகியுள்ளன. பண மதிப்பிழப்பு காலத்தை இது நினைவு கூறுகிறது. நாட்டில், பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா? இவ்வாறு மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பண மதிப்பிழப்பை பிரதமர் மோடி டிவியில் தோன்றி அறிவித்த உடனேயே, இது நாட்டை கெடுத்துவிடும் என முதலில் எச்சரித்த அரசியல் தலைவர் மமதா பானர்ஜிதான். ஆனால் வேறு பல தலைவர்கள் முதலில் அந்த நடவடிக்கையை வரவேற்றனர். பிறகுதான் அது முறையாக திட்டமிடப்படாதது என்பதை உணர்ந்து விமர்சனம் செய்தனர். இப்போது ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழலில், மமதா பானர்ஜி, நாட்டில் பொருளாதார எமெர்ஜென்சியை கொண்டுவர முயற்சி நடக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.


மக்கள் கருத்து

தம்பிApr 17, 2018 - 07:41:01 PM | Posted IP 141.1*****

இதுமாதிரி லூசுகளை எல்லாம் நம்பித்தான் காங்கிரஸ் இறங்கவேண்டியது இருக்கிறத்து

சாமிApr 17, 2018 - 07:39:45 PM | Posted IP 141.1*****

அப்படி இருந்தால் - அதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை - வரவேற்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals

New Shape Tailors


Thoothukudi Business Directory