» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்? அருண் ஜேட்லி விளக்கம்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 4:31:32 PM (IST)

இந்தியாவில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், தாற்காலிக பணத்தட்டுப்பாடு உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிராவின் கிழக்கு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசம், பிகார், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும், ஏராளமானோர் 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து டிவிட்டரில் இன்று விளக்கம் அளித்த அருண் ஜேட்லி, நாட்டில் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளேன்.  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாட்டில் போதுமான அளவுக்கு பணப்புழக்கம் இருக்கிறது. வங்கிகளிலும் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் திடீர் பணத்தேவை, அதிக பணத்தேவை போன்றவை ஏற்பட்டு, ஒரே நேரத்தில் அதிகமானோர் ஏடிஎம்மை பயன்படுத்துவதால் பிகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தாற்காலிக  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப போதுமான அளவுக்கு வங்கிகளிடம் கையிருப்பு உள்ளது.  தாற்காலிக பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல, பணத்தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் உடனடியாக கவனத்தில் கொண்டு, மாநிலம் வாரியாக குழுக்கள் அமைத்து, நிலைமையை ஆய்வு செய்து சீரமைக்கும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் ஷுக்லா கூறியுள்ளார். 

இதே போல, தேவைப்படும் மாநிலங்களுக்கு மற்றொரு மாநிலத்தில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ய, ஆர்பிஐ தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சீரமைக்கப்படும் என்றும் ஷுக்லா கூறியுள்ளார். இந்த நிலையில், ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் தற்போதைய பணப் புழக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலையை அதாவது ரூ.17 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

பாலாApr 17, 2018 - 10:11:36 PM | Posted IP 172.6*****

நீங்க நாட்டை மாத்துவீங்கன்னு பார்த்தா.. நோட்டே மாத்திட்டு இருக்கீங்க..

செய்தியில் வந்ததுApr 17, 2018 - 08:58:52 PM | Posted IP 162.1*****

தமிழகத்தில் கண்டைனர் போல, பெங்களூருக்கு ஒளிந்து கொண்டு போய் இருக்கலாம் , எலெக்ஷன்க்காக ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory