» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்புக்கு காலக்கெடு எதுவும் இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

செவ்வாய் 13, மார்ச் 2018 5:20:09 PM (IST)

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் இணைப்புக்கு காலக்கெடு எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப்பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் எண்கள்,வங்கி கணக்குகள் போன்றவற்றில் பயனாளர்கள் ஆதார் எண்ணை  வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம்  இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது, வங்கி கணக்கு, செல்போன் எண்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீட்டிக்கப்படுவதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors


crescentopticals



Joseph Marketing




Thoothukudi Business Directory